திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையா? இனி கவலை வேண்டாம், கட்டாயம் இந்த பழத்தை சாப்பிடுங்க..
நாகரீகமும் அறிவியலும் பெருகி உள்ள இந்த காலகட்டத்தில், குழந்தை இல்லாமல் காத்திருப்பவர்கள் அநேகர். ஆம், வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் போன்ற பல காரணங்களால் பலருக்கு குழந்தை இருப்பது இல்லை. இதனால் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பெருகி விட்டது. எப்படியாவது தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து விடாதா என்று ஏங்கி நிற்கும் தம்பதிகளின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறி, பல லட்சங்களை செயற்கை கருத்தரிப்பு மையங்கள் சம்பாதித்து வருகின்றன. நீங்களும் அதே சுழலில் இருந்தால் இனி கவலை பட வேண்டாம். கீழே குறிப்பிட்டுள்ள பழத்தை சாப்பிடுவதால் கட்டாயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பழத்தில் அதிக அளவு முள் இருக்கும். இதனால் பலர் இந்த பழத்தை பறிக்க மாட்டார்கள். பல நன்மைகளை கொண்ட கள்ளி பழம் தான் அது. பார்த்து பக்குவமாய் பிரித்த அந்த கள்ளி பழத்தை அப்படியே சாப்பிட முடியாது. ஏனென்றால், அந்த பழத்தின் மேல் புறத்தில், ஆயிரக்கணக்கான கண்ணுக்கு தெரியாத பூமுள் இருக்கும். இதனால் அந்த பழத்தை ஒரு துணியில் சுற்றி, தரையில் உள்ள கல்லில் நன்கு தேய்க்க வேண்டும். பின்னர், கவனமாக பழத்தை பிரித்து பார்த்தல், அதன் உள்ளே நட்சத்திர வடிவிலான தொண்டை முள் இருக்கும்.
அதனால், அந்த தொண்டைமுள்ளையும் எடுத்து விட்டு அந்த பழத்தை சாப்பிட வேண்டும். இந்த பழத்தை சாப்பிடுவதால், இதயம் சீராக துடிப்பது மட்டும் இல்லாமல், இரத்த விருத்தி உண்டாகி, ஆணுக்கு அனுக்கள் அதிகரிக்கும். மேலும், பெண்களுக்கு கரு முட்டை வளர்ச்சி நன்கு இருக்கும். இந்த பழம் சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிப்பது மட்டும் இல்லாமல், பெண்களுக்கு கருப்பை சுத்தம் ஆகும். வாரத்தில் மூன்று முறை இதனை எடுத்துக் கொண்டால் நீர்கட்டி தானாக அழியும்.
குறிப்பு: இந்த பழத்தை சாப்பிடும் பெண்கள், இனிப்பு உணவுகளை சாப்பிடக்கூடாது. நல்ல நடைப்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், இந்த பழத்தை பிரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது.
Read more: NO கெமிக்கல்!! இனி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம், மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம்..