For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொங்கலுக்கு எந்த தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..? அமைச்சர் சிவசங்கர் சொன்ன முக்கிய தகவல்..!!

04:44 PM Jan 08, 2024 IST | 1newsnationuser6
பொங்கலுக்கு எந்த தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்    அமைச்சர் சிவசங்கர் சொன்ன முக்கிய தகவல்
Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் திரும்புவதற்கு ஏதுவாக ஜனவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும், கிளாம்பாக்கத்தில் 5 முன்பதிவு மையங்களும் செயல்படும். இந்த சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களில் வாயிலாக முன்பதிவு செய்யலாம். சிறப்பு பேருந்துகள் குறித்து அறியவும், புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்" என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement