For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Free Bus: மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்தில் இன்று முதல் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம்...!

07:18 AM Feb 25, 2024 IST | 1newsnationuser2
free bus  மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்தில் இன்று முதல் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம்
Advertisement

மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

Advertisement

மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். உதகையில் இன்று தொடங்கும் இந்த திட்டம், படிப்படியாக மற்ற மலை கிராமங்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளூர் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி’ திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம், கோடிக்கணக்கான பெண்களுக்கு பொருளாதார விடியலை கொடுத்துள்ளது. அதன் அடையாளமாக இந்த திட்டத்துக்கு "மகளிர் இலவச பேருந்து" என்று பெயர் வைக்கப்பட்டது பின்னர் "விடியல் திட்டம்" என பெயர் சூட்டப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 314 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர்.

English Summary : From today, women will travel free of charge in government buses operating in hilly areas

Advertisement