அசத்தல்...! நாடு முழுவதும் இன்று முதல்... பாரத் அரிசி கிலோ ரூ.29-க்கு விற்பனை...!
மத்திய அரசு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மானிய விலை அரிசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. திட்டத்தின் படி, 1 கிலோ அரிசி ரூ.29-க்கு விற்பனை செய்யப்படும். ‘பாரத் அரிசி' விற்பனை இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
மத்திய அரசு ஏற்கெனவே பாரத் ஆட்டா (கோதுமை மாவு) கிலோ ரூ.27.50, பாரத் தால் (பருப்பு வகைகள்) கிலோ ரூ.60 என மானிய விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டில் இந்தியாவில் அரிசியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மானிய விலை அரிசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. திட்டத்தின் படி, 1 கிலோ அரிசி ரூ.29-க்கு விற்பனை செய்யப்படும். ‘பாரத் அரிசி' விற்பனை இன்று முதல் நடைமுறைக்கு வரும் என தெரியவந்துள்ளது.
பாரத் அரிசி Amazon போன்ற இணைய வழியிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. அரிசி பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அரிசி கையிருப்பு விவரங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய உணவுத் துறை அமைச்சக வலைதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.