அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை.. புத்தாண்டு வாழ்த்து பதிவில் சொன்ன மெசேஜ் என்ன தெரியுமா?
ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதியான இன்று வரை ஆண்டின் மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்த 2024ஆம் ஆண்டு விடைபெற்றது. இந்த ஆண்டில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான நினைவலைகள் இருக்கலாம்.. அது மகிழ்ச்சியாகவோ சோகமாகவோ எப்படி வேண்டுமானாலும் அமைந்திருந்தாலும் சில நிகழ்வுகளை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.. கோடிக்கணக்கான நினைவுகளையும் நிகழ்வுகளையும் தன்னகத்தே புதைத்துக் கொண்டு 2024 ஆம் ஆண்டு விடைபெற்ற நிலையில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: சாதனைகளை உச்சி முகர்ந்து அங்கீகரிக்கிறோம் எனக் கூறும் விதமாகத்தான் 2024 பாராளுமன்றத் தேர்தலில் “நாற்பதுக்கு நாற்பது” என இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றி மகுடம் சூட்டினர் நம் மக்கள். விடுதலை இந்திய வரலாற்றில் ஜனநாயகத்தை பாதுகாத்து-இந்நாட்டின் பெருமையை நிலைநாட்ட, தமிழ்நாடு மக்கள் அளித்த வெற்றிக்குரிய 2024-ம் ஆண்டு-மறக்க முடியாத ஆண்டாக அமைந்துவிட்டது.
சோதனைகள், தடங்கல்களைக் கடந்து சாதனைகள் படைக்கவும், வெற்றி பெறவுமான நம்பிக்கையினையும் உத்வேகத்தினையும் அளித்தது 2024-ம் ஆண்டு! புத்தாண்டாகிய 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும்! தமிழ்நாடு அதற்கு வழிகாட்டும் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் அமைப்போம்! என இந்நாளில் சபதமேற்போம். மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு, புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும். இவ்வாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
த.வெ.க தலைவர் விஜய்: மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர்கள். மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம். உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை. சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை: பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியில், முன்னெப்போதுமில்லாத வகையில் நம் நாடு, உலகின் முன்னோடியாகத் திகழ்கிறது. வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், முதன்மையான நாடாக இருக்கிறோம். உற்பத்தி, விவசாயம், வானியல் ஆராய்ச்சி, விளையாட்டு, தொழில் வளர்ச்சி என அனைத்துத்திலும் நம் நாடு பல மடங்கு முன்னேறியிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் தற்போதைய நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. தமிழகம் முழுவதுமே, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பெரிதும் கவலை அளிப்பதாக இருக்கிறது.
இந்தச் சூழல் மாறும். நம் தமிழக மக்கள், இந்த இருட்டிலிருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையோடும், பல கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும், புத்தாண்டை எதிர்கொள்கிறோம். புதிய வாய்ப்புகளும், வழிகளும் நம் முன்னே நிறைந்திருக்கின்றன. நம்முடைய தேர்வு, நமக்கானது மட்டுமின்றி, நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குமானது என்பதை நினைவில் கொண்டு, நல்லவற்றையே தேர்ந்தெடுப்போம். தமிழகத்தை மீண்டும் சிறப்பானதாக்குவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன்: மலரும் புத்தாண்டான 2025ம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாய் அமையட்டும். சனநாயகம் தழைக்கும் சாதனை ஆண்டாய் மலரட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், மகிழ்ச்சி, வளர்ச்சி, அமைதி, மனநிறைவு, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும். இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதேபோல் தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சரத்குமார், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விஜய் வசந்த் எம்பி, உள்ளிட்ட பலர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ரஜினி காந்த் : நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான்.கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்.புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 2025ல் நாம் அடியெடுத்து வைக்கும் இத்தருணம், இப்பாதையை நமதாக்கிக்கொண்டு ஒரு சிறந்த அத்தியாதத்தை எழுதுவதற்கான நேரம் இது.. புத்தாண்டு என்பது காலத்தால் முன்னால் போவது என்பது மாத்திரமல்ல; ஞானத்தோடு, உறுதியோடு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக்கொள்ளத் தயார் நிலையோடு முன்னோக்கி நகர்வது. நமது நல்ல கனவுகளை நனவாக்கும் ஆண்டாக இப்புத்தாண்டை ஆக்குவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்
Read more ; Happy New Year 2025 : பூத்தது புது வருடம்.. 365 நாட்களும் இந்த பூ வாடாமல் வாழ்வில் வா