For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Pension..! 2025 ஜனவரி 1 முதல்... எந்த வங்கியிலிருந்தும் ஓய்வூதியம் பெறலாம்...! அசத்தல் அறிவிப்பு..!

From January 1, 2025, EPS pensioners can draw their pension from anywhere in India, from any bank, from any branch.
06:54 AM Sep 06, 2024 IST | Vignesh
pension    2025 ஜனவரி 1 முதல்    எந்த வங்கியிலிருந்தும்  ஓய்வூதியம் பெறலாம்     அசத்தல் அறிவிப்பு
Advertisement

2025 ஜனவரி 1 முதல் இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் இந்தியாவில் எங்கிருந்தும், எந்த வங்கியிலிருந்தும், எந்தக் கிளையிலிருந்தும் ஓய்வூதியம் பெறலாம்.

Advertisement

மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரும், இபிஎஃப் மத்திய அறங்காவலர் வாரியத் தலைவருமான மன்சுக் மாண்டவியா, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995-க்கான மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவு முறைக்கான (சிபிபிஎஸ்) முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். சிபிபிஎஸ் தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட அமைப்பை நிறுவுவதன் மூலம் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது, இந்தியா முழுவதும் எந்தவொரு வங்கியிலும், எந்தவொரு கிளை மூலமாகவும் ஓய்வூதியப் பட்டுவாடாவை செயல்படுத்துகிறது.

இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவு முறையின் ஒப்புதல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நவீனமயமாக்கலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. நாட்டின் எந்த இடத்திலும் உள்ள எந்தவொரு வங்கியிலிருந்தும், எந்தவொரு கிளையிலிருந்தும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற உதவுவதன் மூலம், இந்த முயற்சி ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலச் சவால்களுக்கு தீர்வு காண்பதுடன், தடையற்ற மற்றும் திறமையான பட்டுவாடா வழிமுறையை உறுதி செய்கிறது.

மிகவும் வலுவான, பதிலளிக்கக்கூடிய மற்றும் இபிஎப்ஓ-வை தொழில்நுட்பம் இயக்கப்பட்ட அமைப்பாக மாற்றுவதற்கான எங்கள் தற்போதைய முயற்சிகளில் இது ஒரு முக்கியமான படியாகும், அதன் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் தேவைகளை சிறப்பாக வழங்க உறுதிபூண்டுள்ளது என்றார். இபிஎப்ஓ-வின் தற்போதைய தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வசதி 2025 ஜனவரி 1 முதல் தொடங்கப்படும். அடுத்த கட்டமாக, ஆதார் அடிப்படையிலான கட்டண முறைக்கு சுமூகமாக மாறுவதற்கு இது உதவும். சிபிபிஎஸ் என்பது தற்போதுள்ள ஓய்வூதிய வழங்கல் முறையிலிருந்து ஒரு முன்னுதாரண மாற்றமாகும், இது பரவலாக்கப்பட்டுள்ளது, இபிஎப்ஓ-வின் ஒவ்வொரு மண்டல / பிராந்திய அலுவலகமும் 3-4 வங்கிகளுடன் மட்டுமே தனித்தனி ஒப்பந்தங்களை பராமரிக்கிறது.

ஓய்வூதியம் தொடங்கும் நேரத்தில் ஓய்வூதியதாரர்கள் சரிபார்ப்புக்காக வங்கிக் கிளைக்கு வர வேண்டிய அவசியமில்லை, ஓய்வூதியம் விடுவிக்கப்பட்டவுடன் உடனடியாக வரவு வைக்கப்படும். கூடுதலாக, புதிய முறைக்கு மாறிய பிறகு ஓய்வூதிய விநியோகத்தில் குறிப்பிடத்தக்க செலவு குறைப்பை இபிஎப்ஓ எதிர்பார்க்கிறது.

Tags :
Advertisement