இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க..!! இதய நோய் வரும் அபாயம்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!
மைதா மாவு கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்றாலும், அது ஆரோக்கியமான உணவு என்று கூற முடியாது. ஏனென்றால், கோதுமையில் இருந்து உமியை நீக்கிவிட்டு தவிடுடன் தயாரிக்கப்படும் மாவு தான், கோதுமை மாவு. தவிடு நீக்கிய கோதுமையை மிகவும் மிருதுவாக அரைத்தால் அது மைதா. அதனால் கோதுமையை போல், முக்கியமானது கிடையாது. மைதா என்றதும் நம் மனதில் முதலில் தோன்றுவது பரோட்டா தான்.
பரோட்டா மட்டுமின்றி, நமது அன்றாட உணவுகளில் மைதா நீக்கமற நிறைந்துள்ளது. வெள்ளை பிரட், பீசா, நூடுல்ஸ், பாஸ்தா, கேக்குகள், நம் அன்றாடம் சாப்பிடும் பல பிஸ்கட் வகைகள் மைதா நிரம்பியுள்ளது. அதோடு பாதுஷா, குலாப் ஜாமுன், மைதா கேக் போன்ற இனிப்பு வகைகள் பல மைதா மாவில் தயாரிக்கப்படுகின்றன. சத்துக்கள் இல்லை என்றாலும் சுவையாக இருப்பதால், அதை பலரும் வாங்கி சாப்பிடுகின்றனர்.
ஆனால், மைதாவில் குளூட்டன் என்னும் புரதம் உள்ளதால், அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. ஏனெனில், மைதா மாவில் இருப்பது கலோரிகள் மட்டுமே. நார் சத்துக்கள் முற்றிலுமாக நீக்கப்படுகின்றன. ஊட்டச்சத்துக்கள் எதுவும் அதில் இல்லை. மைதா உணவுகளை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடுவதால், பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஆனால், மைதா உணவுகளை வழக்கமாக்கி கொண்டால் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும்.
சர்க்கரை நோய் அபாயத்தை அதிகரிக்கும் மைதா
மைதா உணவுகளை அளவிற்கு அதிகமாகக் கொள்வதும், வழக்கமாக உட்கொள்வதும், சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். கிளைசிமி குறியீடு அதிகம் கொண்ட மைதா மாவு, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் மைதா உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
எலும்புகள் பலவீனமாகும்
மைதாவை உட்கொள்வதால் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும். எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி பலவீனப்படுத்தும் மைதாவை, அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, ஆஸ்டியோ புரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எலும்புகள் பலவீனம் அடைவதால் அடிக்கடி எலும்பு முறிவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
செரிமான பிரச்சனை
மைதா மாவில் நார்ச்சத்து இல்லை என்பதால், எளிதில் ஜீரணம் ஆகாது. செரிமான ஆரோக்கியத்தையும் பாதிக்கும். குடலில் ஒட்டிக்கொண்டு பிரச்சனைகளை உண்டாக்கும் மைதாவை அடிக்கடி சேர்ப்பதால், மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்
மைதா மாவில் தயாரித்த உணவுகளை, அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால், உடல் பருமன் அதிகரிக்கும். ஏனெனில், இது மாவுச்சத்து நிறைந்தது. கலோரிகளும் அதிகம். இதனால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். எனவே, இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை தவிர்க்க, மைதா மாவில் செய்த உணவுகளை அளவோடு சாப்பிடுவது நல்லது.