For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கவனம்...! வரும் 28 முதல் நவம்பர் 2-ம் தேதி வரை... ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு...!

From 28th to 2nd November... School Education Department important announcement for teachers
05:36 AM Oct 20, 2024 IST | Vignesh
கவனம்     வரும் 28 முதல் நவம்பர் 2 ம் தேதி வரை    ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
Advertisement

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக கற்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2-ம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் திட்ட பாடப்பொருள் சார்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

Advertisement

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக கற்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2-ம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் திட்ட பாடப்பொருள் சார்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.

அதன்படி மாநில கருத்தாளர்களுக்கு அக்டோபர் 22, 23-ம் தேதிகளில் இணைய வழியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாவட்டக் கருத்தாளர்களுக்கு அக்டோபர் 24, 25-ம் தேதிகளில் நேரடியாக பயிற்சி வழங்கப்படும். தொடர்ந்து மாவட்டக் கருத்தாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியத்தில் அக்டோபர் 28, 29-ம் தேதிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், நவம்பர் 4, 5-ம் தேதிகளில் 4, 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப் பொருள் கற்பிப்பது சார்ந்து எழும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

Tags :
Advertisement