For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

1 முதல் 12ஆம் வகுப்பு வரை..!! தமிழ்நாடு முழுவதும்..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

In order to develop leadership qualities among the students, student groups named Kurinji, Mullai, Marutham, Neithal, Balai will be formed and student leaders and student ministers will be selected.
12:33 PM Oct 06, 2024 IST | Chella
1 முதல் 12ஆம் வகுப்பு வரை     தமிழ்நாடு முழுவதும்     பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மாணவர் தலைவர், மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ”தமிழ்நாட்டில் அனைத்து விதமான பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மாணவர் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதன்மூலம் மாணவர்களிடம் அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட மாதிரி சட்டப்பேரவை, நாடாளுமன்றம் நடத்தப்படும். இதற்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது. இத்திட்டம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதை செயல்படுத்தும் வகையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் குழு அமைப்பினை 'மகிழ் முற்றம்' என்ற பெயரில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழு அமைப்பில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இடம்பெறுவர். இதுதவிர பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியர் மகிழ் முற்றம் என்ற மாணவர் குழு அமைப்புக்கான பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட வேண்டும். மற்ற ஆசிரியர்களுக்கு குலுக்கல் முறையில் குழுவானது ஒதுக்கப்படும்.

ஒவ்வொரு குழுவுக்கும் உயர் வகுப்பில் பயிலும் மாணவர்களில் இருவர் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதேபோல், வகுப்பு வாரியாகவும் அந்தக் குழுவின் மாணவர் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கான மாணவர் தலைவர்கள், வகுப்பு தலைவர்கள், தலைமை பொறுப்பு ஆசிரியர், குழுவுக்கான பொறுப்பு ஆசிரியர்கள் ஆகியோரின் பதவி ஏற்பு விழா அனைத்து பள்ளிகளிலும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அந்த நிகழ்வின் படங்கள், காணொலியை எமிஸ் தளத்தில் நவம்பர் 19-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த குழுக்களின் செயல்பாடுகள் மாதந்தோறும் மதிப்பீடு செய்யப்பட்டு புள்ளிகள் கணக்கிடப்படும். அதிக புள்ளிகளைப் பெறும் குழுவானது அந்த மாதத்தின் வெற்றிக் குழுவாக அறிவிக்கப்பட்டு அதன் வண்ணக்கொடி பள்ளியில் அனைவரின் பார்வைக்கும் எதிர்வரும் மாதம் முழுவதும் காட்சிப்படுத்த வேண்டும். இதுகுறித்த தகவல்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : பாலியல் வழக்கில் சிக்கிய நடன இயக்குனர் ஜானி..!! அறிவிக்கப்பட்ட தேசிய விருதை ரத்து செய்வதாக அறிவிப்பு..!!

Tags :
Advertisement