அடிக்கடி ஆண்கள் நடமாட்டம்..!! ஜோராக நடந்த பாலியல் தொழில்..!! சோதனை செய்த போலீசுக்கு பயங்கர ஷாக்..!!
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி கர்ஷக ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அடிக்கடி ஆண்கள் அதிகளவில் சென்று வருவதால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, அந்த விடுதியில் விபச்சாரம் நடப்பதை அறிந்த மக்கள், போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, எர்ணாகுளம் மாவட்ட விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த விடுதியில் உள்ள ஒரு அறையில் சோதனை நடத்திய போது கொல்லம் நகரை சேர்ந்த ரஷ்மி, உதவியாளர்கள் ரிஜோ, மார்டின் ஆகியோர் இருந்தனர். மற்றொரு அறையில் 2 இளம்பெண்களை தங்க வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ரஷ்மி, அவரது உதவியாளர்கள் ரிஜோ, மார்டின் உள்பட 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
விசாரணையில், போலீஸ்காரர்கள் இரண்டு பேர் தான் விபச்சாரத்தை நடத்துகிறார்கள் என்பது தெரியவந்தது. இதை முதலில் நம்ப மறுத்த போலீசார், என்ன ஆதாரம் உள்ளது என்று தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர்களது 2 வங்கி கணக்குகளில் இருந்து பாலாரி வட்டம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பிரிஜேஷ் லால் மற்றும் எர்ணாகுளம் கிழக்கு போக்குவரத்து காவல் ஏட்டு டி.கே.ரமேஷன் ஆகியோருக்கு பணம் அனுப்பியதும், விபசாரம் நடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கொச்சி மாநநகர போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Read More : பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்..!! திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை அதிமுக போராட்டம்..!!