For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பக்கத்து வீட்டுக்காரருடன் அடிக்கடி உல்லாசம்..!! திடீரென போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்த பெண்..!! நள்ளிரவில் நடந்த அட்ராசிட்டி..!!

The incident of a 35-year-old woman attempting to set herself on fire at the Vadapalani police station in Chennai caused a stir.
04:44 PM Jan 03, 2025 IST | Chella
பக்கத்து வீட்டுக்காரருடன் அடிக்கடி உல்லாசம்     திடீரென போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்த பெண்     நள்ளிரவில் நடந்த அட்ராசிட்டி
Advertisement

சென்னை வடபழனி காவல்நிலையத்தில் 35 வயது பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண் போலீசில் அளித்த புகாரில், ”எனது காதலனுடன் உடலுறவு வைத்துக் கொண்ட நிலையில், இப்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென” கூறினார். இந்தப் பெண் புகாரளித்தபோது நள்ளிரவு 1 மணி. அப்போது, போலீசார் ரோந்து பணியில் இருந்ததால், பெண் போலீஸ் ஆர்த்தி மட்டும் ஸ்டேஷனில் இருந்துள்ளார்.

Advertisement

அவர், அந்த பெண்ணிடம் எழுத்துப்பூர்வமாக புகாரளிக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றி, 'எனக்கு நீதி வேண்டும், என் காதலனுடன் உடனடியாக திருமணம் செய்துவையுங்கள்' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, ஆர்த்தி மற்றும் அங்கிருந்தவர்கள் அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றி, அசம்பாவிதம் நடப்பதற்குள் காப்பாற்றினர். இதையடுத்து, காவல் நிலையம் வந்த இன்ஸ்பெக்டர் அம்மு, தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், அந்த பெண் வடபழனி வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், இவருக்கு ஏற்கனவே திருமணமாகியிருப்பதும் தெரியவந்தது. அந்தப் பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் அறிவழகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. அறிவழகனுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும் உள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதையடுத்து, புத்தாண்டு தினத்தன்று இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் கேட்டபோது, ​​மனைவியை விட்டு பிரிந்து வர முடியாது என அறிவழகன் கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த பெண் காவல் நிலையம் வந்து நாடகமாடியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, உடனே போலீசார் அந்த பெண்ணின் கணவரையும், கள்ளக்காதலன் அறிவழகனையும் வரவழைத்து இரு தரப்பினரிடமும் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்று அந்த பெண்ணையும் அவரது கணவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Read More : ‘Virgin’ பெண் தான் வேணுமா..? அப்படினா ஆண்கள் திருமணத்திற்கு முன் செக்ஸ் வெச்சிக்காதீங்க..!! பாடகி சின்மயி பதிலடி..!!

Tags :
Advertisement