வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு செல்ல இலவச வாகனம்..!! இந்த நம்பருக்கு ஒரு ஃபோன் பண்ணா போதும்..!!
வாக்களிக்க வரும் மக்களுக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. குறிப்பாக, பெண்களின் வசதிக்காக சென்னையில் உள்ள 16 பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் பலவித வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சொல்ல போனால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க தேவையில்லை. அவர்களுக்கு என்று தனி வரிசை என பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
அந்த வகையில், தற்போது மற்றொரு வசதியையும் ஏற்பாடு செய்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதாவது, நாளை நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க இருக்கும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் வாகன வசதி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் அவர்களை வீட்டுக்கே அழைத்து சென்று விடப்படும். இதற்கு கட்டணம் கிடையாது. அதேபோன்று மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாக்காளர் அடையாள அட்டையை காட்டினால், அரசு பஸ்சில் இலவசமாக பயணம் செய்து வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : இப்படி ஒரு வசதியா..? உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் இருக்கான்னு தெரிஞ்சிக்கணுமா..?