For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குட் நியூஸ்... காவலர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்... டிச.16-க்குள் பட்டியல் அனுப்ப உத்தரவு...!

Free travel on government buses for policemen... Order to send list by Dec. 16
07:32 AM Nov 30, 2024 IST | Vignesh
குட் நியூஸ்    காவலர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்    டிச 16 க்குள் பட்டியல் அனுப்ப உத்தரவு
Advertisement

தமிழகத்தில் கீழ்நிலை காவலர்கள் முதல் ஆய்வாளர் வரை தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தில் அரசு பேருந்தில் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்வதற்கான ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க முடிவு. ஸ்மார்ட் அடையாள அட்டை பெற வேண்டியவர்கள் தொடர்பான தகவலை வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

தமிழக காவல் துறையில் டிஜிபி தலைமையில் சட்டம் , ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பிக்கள், டிஎஸ்பி, ஆய்வாளர்கள், காவலர்கள் என, சுமார் 1,21,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களில் 10 சதவீதத்திற்கு மேல் மகளிர் போலீஸார். அரசு பேருந்துகளில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பணி செய்யும் மாவட்டத்திற்குள் தங்களது அடையாள அடடைகளை காண்பித்து இலவச பயணம் மேற்கொள்ளலாம். இதற்காக நவீன அட்டை அட்டை வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்திருந்தது.

இந்தத் திட்டத்திற்கான அரசாணை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டும், காவல்துறை அதிகாரிகளுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், காவல்துறை முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை, அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்வதற்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர காவல் துறை கமிஷனர்கள், நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான விபரங்களை, டிச., 16க்குள் அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

Tags :
Advertisement