For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜாபர் சாதிக்கின் ஜாமீன் மனு... ED-க்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

Jaffer Sadiq's bail plea... CBI special court orders ED to take action
07:12 AM Nov 30, 2024 IST | Vignesh
ஜாபர் சாதிக்கின் ஜாமீன் மனு    ed க்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement

ஜாபர் சாதிக்கின் ஜாமீன் மனுவுக்கு டிசம்பர் 2-ம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகளும் கடந்த ஜூன் 26-ல் ஜாபர் சாதிக்கை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாபர் சாதி்க்கின் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குநர் அமீரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

Advertisement

இந்நிலையில் முகமது சலீமை அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ல் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாபர் சாதிக் தம்பி முகமது சலீம், மனைவி பானு, சினிமா இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. அவர்களிடம் விசாரணை நடத்திய அமலாக்க துறையினர் ஜாபர் சாதிக் தம்பி முகமது சலீமை கைது செய்தனர். ஜாபர் சாதிக், அவரது குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் பெயரில் இருந்த சொத்துகள் முடக்கப்பட்டன. சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கில், அமலாக்க துறையினர் 302 பக்க குற்றப்பத்திரிகையை செப்டம்பர் 18ல் தாக்கல் செய்தனர்.

சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம், மைதீன் கனி, இயக்குநர் அமீர் உள்ளிட்ட 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசிய நிறுவனங்களுக்கு உணவு, மருந்து மூலம் போதைப் பொருள் கடத்தப்பட்டது. போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் தொடங்கிய வர்த்தகத்தில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜாபர் சாதிக்கின் ரூ. 55.3 கோடி சொத்துகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் ஜாபர் சாதிக்குக்கு ஜாமீன் தரக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன் முன்பாக நடைபெற்றது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். அதையடுத்து இந்த வழக்கை நீதிபதி டிச.2-ம் தேதிக்கு தள்ளிவைத்து, அதற்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement