மகிழ்ச்சி செய்தி...! 60 வயது நிரம்பிய கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்...!
கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், துறைவாரியான அமைச்சர்கள், தங்களது மானிய கோரிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில், அமைச்சர் இராமச்சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் முக்கிய அறிவிப்புகளை, மானியக் கோரிக்கை வழி வெளியிட்டார். அதன்படி, கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் கட்டணமின்றி பயணம் செய்யலாம். அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் கட்டணமின்றி செல்ல அனுமதி. 60 வயது நிறைவடைந்திருப்பின், அவருடன் உதவியாளர் ஒருவரும் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர்.
நாகப்பட்டின அரசு அருங்காட்சியகத்தில், நவீன தொழில் நுட்பத்துடனும், காட்சியமைப்புடனும் கூடிய புதிய காட்சிக் கூடங்கள் அமைத்து, ரூ. 1.50 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படும். மருத்துவம் மற்றும் ஆரோக்கியச் சுற்றுலாவை (Medical and Wellness Tourism) மேம்படுத்தும் வகையில் கோயம்புத்தூரில், ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மருத்துவச் சுற்றுலா மாநாடு நடத்தப்படும். உட்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுலா சேவைகளின் தர மேம்பாட்டின் மூலம் பிரபலப்படுத்த, ரூ. 2 கோடி மதிப்பீட்டில் "சுற்றுலாப் பெருந்திட்டம்” தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.