முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம்..!! மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

02:19 PM Apr 27, 2024 IST | Chella
Advertisement

நம் நாட்டில் ஏழை, எளிய மக்களின் எண்ணிக்கை அதிகம். அன்றாட வாழ்க்கையை நடத்துவதே கஷ்டம் என்ற நிலையில் தான் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருக்கையில், லட்சக்கணக்கில் செலவு செய்து உயிருக்கு ஆபத்தான நோய்களை குணப்படுத்திக் கொள்வது அவர்களால் முடியாத ஒரு காரியம் தான். இதற்காக தான் மத்திய-மாநில அரசு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகின்றன.

Advertisement

மத்திய அரசு கடந்த 2018இல் “ஆயுஷ்மான் பாரத் யோஜனா” என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சேவை பெற முடியும். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் இணைந்து ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 17,000 மருத்துவமனைகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், இதன் மூலம் பயனாளிகளுக்கு அறுவை மற்றும் நவீன சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது.

ஆயுஷ்மான் பார்த் யோஜனா திட்டத்தின் பயன்கள்:

* கொடிய நோய்களுக்கு செலவின்றி மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்.

* ஆயுஷ்மான் காப்பீடு அட்டை மூலமாக குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம்.

* அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதியும் உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி..? தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

* ஆதார் கார்டு

* ரேசன் கார்டு

* செல்போன் எண்

* முதலில் PMJAY என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

* பிறகு கேட்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட்ட பின்னர் ஆயுஷ்மான் கார்டை தபால் மூலம் அனுப்பி வைப்பார்கள்.

Read More : அடடே..!! இனி இவ்வளவு ஈசியா ரயில் டிக்கெட் புக் பண்ணலாமா..? பயணிகளே நோட் பண்ணிக்கோங்க..!!

Advertisement
Next Article