முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஒரு மாதத்திற்கு இலவசம்..!! பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணத்தில் மாற்றம்..!! விவரம் உள்ளே..!!

02:27 PM Apr 16, 2024 IST | Chella
Advertisement

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியானது குறிப்பிட்ட சேவைக்கான கட்டண முறைகளை மாற்றி அமைத்துள்ளது.

Advertisement

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியானது பணம் வைத்தல், பணம் எடுத்தல், இருப்பு விசாரணை, மினி அறிக்கை, ஆதார் கார்டு நிதி பரிமாற்றம், ஆதார் பே என பல்வேறு வகையான சேவைகளை மக்களுக்கு எளிய முறையில் வழங்கி வருகிறது. இந்த நிலையில் தான், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியானது ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறைகளுக்கான பரிவர்த்தனை சேவை கட்டணத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறை ஜூன் 15, 2024 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.

அதாவது புதிய அறிவிப்பின்படி, இலவச வரம்பை மீறும் பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் 20 மற்றும் ரொக்கம் மற்றும் டெபாசிட் ஜிஎஸ்டி அல்லது மினி ஸ்டேட்மெண்ட் போன்ற செயல்பாடுகளுக்கு ரூபாய் 5 அதனுடன் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். பணத்தை டெபாசிட் செய்வது, திரும்ப பெறுவது, மினி ஸ்டேட்மென்ட் போன்ற 3 பரிவர்த்தனைகளை பயனர்கள் ஒரு மாதத்திற்கு இலவசமாக மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : தயிர் மற்றும் மோரில் எது சிறந்தது..? இந்த கோடை வெயிலுக்கு எதை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்..?

Advertisement
Next Article