For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிகாரியிடம் ரூ.55 லட்சம் மோசடி!. டிஜிட்டல் கைது என்றால் என்ன?. மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி?.

How to avoid digital arrest scams? Centre's advisory as frauds rise across India
05:50 AM Oct 07, 2024 IST | Kokila
அதிகாரியிடம் ரூ 55 லட்சம் மோசடி   டிஜிட்டல் கைது என்றால் என்ன   மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி
Advertisement

Digital Arrest: ஆன்லைனில் நடைபெரும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தநிலையில், இந்தியாவில் அதிகரித்து வரும் 'டிஜிட்டல் கைது' குற்றங்கள் தொடர்பாக சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் சனிக்கிழமை ஒரு பொது ஆலோசனையை வழங்கியுள்ளது.

Advertisement

அதில், சிபிஐ, காவல்துறை, சுங்கம், ED அல்லது நீதிபதிகள் போன்ற சட்ட அமலாக்க முகவர்கள் வீடியோ அழைப்புகள் மூலம் மோசடிகள் செய்வதில்லை என்றும், இந்த மோசடி திட்டங்களுக்கு பலியாகாமல் இருக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் போன்ற சமூக ஊடக தளங்களின் லோகோவை பயன்படுத்தி மோசடிகள் நடைபெறுகிறது. இதனால், பீதியடைய வேண்டாம் என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த மாதம், 'டிஜிட்டல் கைது' வழக்கில், தேசிய கட்டடங்கள் கட்டுமான நிறுவன (என்பிசிசி) மூத்த அதிகாரி ஒருவர் ₹ 55 லட்சம் மோசடி செய்யப்பட்டார். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், செப்டம்பர் 9 அன்று, மும்பை சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2-ல் இருந்து அதிகாரி என்று கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து 35 வயது பெண் ஒருவர், மும்பை காவல்துறையால் தனக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி மோசடி செய்துள்ளார். எனவே, இதுபோன்ற குற்றங்களை 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் தெரிவிக்கவும் அல்லது சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கைது என்பது சைபர் மோசடியின் ஒரு புதிய முறையாகும், இதில் மோசடி செய்பவர்கள் ஆடியோ அல்லது வீடியோ அழைப்புகளைச் செய்து, சட்ட அமலாக்க அதிகாரிகளாகக் காட்டிக்கொள்கிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் தனிநபர் அல்லது அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் போதைப்பொருள் கடத்தல் அல்லது பணமோசடி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டதாகவும், அதனால் அவர்கள் வீடியோ அழைப்புகள் மூலம் கைது செய்யப்பட்டதாகவும் பொய்யாகக் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை அவர்களது வீடுகளுக்குள்ளேயே அடைத்து வைக்கின்றனர்.

டிஜிட்டல் கைது' நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அவர்களின் மொபைல் ஃபோன் கேமராக்களை இயக்கும்படி அறிவுறுத்துகிறார். பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்டவரின் விடுதலைக்காக ஆன்லைன் பரிமாற்றங்கள் மூலம் பணம் கோருகின்றனர்.

Readmore: நடிகை ஷில்பா ஷெட்டியின் கன்னத்தில் நச் நச்..!! நடிகரின் செயலால் அதிர்ச்சி..!!

Tags :
Advertisement