முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்!. ஜோ பைடன் இரங்கல்!.

Former US President Jimmy Carter has passed away! He was 100 years old! Joe Biden mourns!
09:15 AM Dec 30, 2024 IST | Kokila
Advertisement

Jimmy Carter: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் தனது 100 வது வயதில் காலமானார்.

Advertisement

அமெரிக்காவின் 39 வது அதிபரான இவர் ஒரு வருட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பிளெய்ன்ஸ், கியோர்கியாவில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (டிச.,29) ல் சிகிச்சை பலனின்றி காலமானார். ஜிம்மி கார்டர் 1977 ம் ஆண்டு முதல் 1981 வரை அமெரிக்க அதிபராக பணியாற்றி வந்தார். மனித நேயமிக்க சிறந்த சேவைக்காக 2002 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

முன்னாள் அதிபர் மறைவினையொட்டி அமெரிக்க வெள்ளை மாளிகையில் அந்நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் தனது இரங்கல் செய்தியில், சிறந்த மனித நேயம் மிக்க தலைவரையும், நண்பரையும் இழந்து விட்டதாக தெரிவித்தார்.

Readmore: ‘எதிரிகள் சுறுசுறுப்பாக உள்ளனர்; எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்’!. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி!

Tags :
100 years oldFormer US PresidentJimmy carterJoe Biden mournspassed away!
Advertisement
Next Article