முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சோகம்...! அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்...!

Former US President Jimmy Carter has died of old age.
06:49 AM Dec 30, 2024 IST | Vignesh
Advertisement

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார். அவருக்கு வயது 100. ஜார்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அவர் காலமானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனநாயகக் கட்சி சார்பில் 39-வது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிம்மி கார்டர், 1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை பொருளாதார நெருக்கடிகளால் சூழப்பட்ட நிலையிலும் சிறப்பாக பணியாற்றினார். கேம்ப் டேவிட் உடன்படிக்கையின் படி மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், அதன் எதிரி நாடான எகிப்து நாட்டிற்கு இடையே நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றினார்.

Advertisement

அமெரிக்க அதிபர்கள் வரலாற்றில் அதிக வயது வரை வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரிய ஜிம்மி கார்டர், கடந்த அக்டோபர் மாதம் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திருமணமாகி 77 ஆண்டுகளான அவரது மனைவி ரோசலின் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் மரணமடைந்தார். ஜிம்மி கார்டர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பிறகு, மனிதாபிமானப் பணிகளுக்காக அவருக்கு 2002 இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
americanformer presidentJimmy carterpassed away
Advertisement
Next Article