இனி விவகாரத்து செய்தால் கணவன் - மனைவி இருவருக்குமே தண்டனை..!! அதிரடி உத்தரவு போட்ட வடகொரியா..!!
விவாகரத்து செய்யும் தம்பதிகளை 6 மாதங்கள் வரை தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்புமாறு வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியா ஏற்கனவே கடுமையான சட்டங்களையும், மோசமான விதிமுறைகளையும், அதை மீறுபவர்களுக்கு மிக கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. அதில், தற்போது புதிதாக விவாகரத்து சட்டம் ஒன்று சேர்க்கப்பட்டு உள்ளது. அதன்படி, திருமண உறவை முடித்துக்கொள்வது என்பது குடும்ப முறைக்கு எதிரானதாகும்.
இதற்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே விவாகரத்துகள் குறையும். இதற்கு முன்னதாகவே வடகொரியாவில் விவாகரத்து வழக்குகள் கடுமையாக இருந்தன. இப்போது வந்துள்ள சட்டம் ஏற்கனவே உள்ள சட்டங்களை கடுமையாக்கும் வகையில் உள்ளது. முன்னர் தம்பதிகளில் விவாகரத்து கோரும் தரப்பினரை மட்டுமே தண்டிக்கும் வகையில் சட்டம் இருந்தது.
அதாவது, ஒரு மனைவி உடல் ரீதியான துன்புறுத்தப்படுவதாக கூறி விவாகரத்து கேட்டால் கூட அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இனி கணவன் - மனைவி இருவருக்கும் தண்டனை வழங்கப்படும். விவாகரத்து செய்யும் தம்பதிகளை 6 மாதங்கள் வரை தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்புமாறு வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உத்தரவிட்டுள்ளார். அங்கு கடுமையான வேலைகள், போதுமான உணவு இல்லாமல் கொடுக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு போட்டுள்ளாராம்.
கொரோனா காலத்திற்கு பின் வடகொரியாவில் விவாகரத்துகள் அதிகம் நடக்கின்றன. இதை கிம் ஜோங் அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதை தடுப்பதற்காகவே இந்த புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More : டியூஷன் சாருடன் காதல்..!! ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி..!! அங்கன்வாடி கட்டிடத்திற்குள் நடந்த பயங்கரம்..!!