ஓபிஎஸ் தலையில் இடியை இறக்கிய மாஜி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்..!! அதிமுகவில் இணைய முடிவு..!!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணி என தனித்தனியாக பிரிந்தது. பிறகு, அதிமுகவை மீட்போம், இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று இரு தரப்பினரும் தங்களுடைய மோதலை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்ற நிலையில், இறுதியாக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். கட்சியும் அவரது வசம் ஆனது.
இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக உரிமை மீட்பு குழுவை உருவாக்கினார். அதில் முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், கு.ப. கிருஷ்ணன் உள்பட ஒரு சிலர் கைகோர்த்து பயணித்தனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வியை சந்தித்தார். அங்கு இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட நிகழ்வு அவரது அணியில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.
அவரது அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஏற்கனவே அங்கிருந்து விலகி விட்டார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று விரைவில் தாய் கழகமான அதிமுக-வில் சேர்ந்து விடுவார் என்று அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Read More : நாட்டையே உலுக்கிய நிலச்சரிவு..!! முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..?