"அடிச்சான் பாருய்யா அந்தர் பல்டி."! இந்திய அணியின் முன்னாள் வீரர் அரசியல் கட்சியில் இருந்து விலகல்.!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பட்டி ராயுடு கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் அரசியல் கட்சியிலிருந்து வெளியேறி இருக்கும் நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரராக வலம் வந்தவர் அம்பத்தி ராயுடு. இவர் கடந்த வருடம் ஐபிஎல் தொடர் வெற்றிக்கு பிறகு அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் இவர் ஆந்திராவின் ஆளுங்கட்சியான யுவஜன ஸ்ரமிக்க ரித்து காங்கிரஸ் பார்ட்டியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முதல்வரான ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் துணை முதல்வர் நாராயண சுவாமி ஆகியோரின் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் சிறிது காலம் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாகவும் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார். சூரத் இந்த திடீர் முடிவால் ஆந்திரா அரசியலில் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டிருக்கிறது.
இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் ராயுடு 1694 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சராசரி 47.05 ஆகும் . மேலும் அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 124 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்துள்ளார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரான ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய் எஸ் ஷர்மிளாவும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த இந்த முடிவுகளால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.