For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சொத்து குவிப்பு வழக்கு... முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு...!

Former Chief Minister OPS appeals to the Supreme Court
07:14 AM Nov 27, 2024 IST | Vignesh
சொத்து குவிப்பு வழக்கு    முன்னாள் முதல்வர் ஓ பி எஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
Advertisement

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Advertisement

கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிகாலத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில் உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தொடர்புடைய சொத்து குவிப்பு வழக்கை முடித்து வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Tags :
Advertisement