For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று..!

10:10 AM Jun 03, 2024 IST | Kathir
முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று
Advertisement

தமிழ்நாட்டை 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவரும், திமுகவின் தலைவருமாக இருந்த மு.கருணாநிதியின் 101வது பிறந்த நாள் இன்று. அரசியல், இலக்கியம் திரைப்படம், நாடகம் எனப் பல்வேறு துறைகளில் அழியாத் தடம் பதித்து தமிழ் மொழி, மாநில முன்னேற்றத்துக்குப் பெரும் பங்காற்றியவர் மு.கருணாநிதி.

Advertisement

1924 ஜூன் 3 - திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளையில் பிறந்தார். திராவிட அரசியலில் மைல்கல்லாக இருந்த முத்துவேல் கருணாநிதி, 50 ஆண்டுகள் மக்களுக்காக உழைத்தார், தன்னுடைய 14 வயதில் போராட்ட களம் கண்டவர்.

1947ஆம் ஆண்டு ராஜகுமாரி என்ற படத்திற்கு முதன்முறையாக பணியாற்றினார் கலைஞர் கருணாநிதி. இவருடைய வசனத்தில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் பொன்னர் சங்கர் (2011).

தனது வாழ்நாளில் 21 நாடகங்கள், 69 திரைப்படங்களில் தன் உழைப்பை கொடுத்துள்ளார் கலைஞர். மக்கள் திலகம் எம்.ஜி. ஆருடன் சுமார் 9 படங்களில் பணியாற்றியிருக்கிறார். 1957ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் குளித்தலை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்றவர், அப்போது அவருக்கு வயது 33.

தமிழ்நாட்டில் 12 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். இந்திய அரசியல்வாதிகளில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாக இது கருதப்படுகிறது. இப்படி பல சாதனைகளை படைத்த கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

Tags :
Advertisement