பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி…!
ராஷ்டிரிய ஜனதா தள(ஆர்ஜேடி) தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் (76) மும்பை மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10 ஆம் தேதி மும்பையில் உள்ள ஏசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், புதன்கிழமை ஆஞ்சியோபிளாஸ்டிக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
76 வயதாகும் லாலு பிரசாத் யாதவ் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை கோளாறு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஜாமீனில் வெளிவந்துள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2022ஆம் ஆண்டு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உட்பட பல நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த ஆண்டு ஜூலை மாதம், யாதவின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டில், லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. சிங்கப்பூரில் வசிக்கும் அவரது மகள் ராஹினி ஆச்சார்யா தனது சிறுநீரகங்களில் ஒன்றை அவருக்கு தானமாக அளித்தார். தற்போது மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டிக்கு உட்படுத்தப்பட்ட லாலு பிரசாத் யாதவ் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More: ஒருநாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கிறீங்க..? சுகாதாரத்துறை நிபுணர்களின் எச்சரிக்கையை பாருங்க..!!