For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நெத்தியடி பதில்!. ஸ்டாலினுக்கு அறிவுரை கொடுங்க!. திருமாவை அலறவிட்ட நிர்மலா!.

Forehead answer!. Advise Stalin! Nirmala screamed at Thiruma!
06:24 AM Jul 03, 2024 IST | Kokila
நெத்தியடி பதில்   ஸ்டாலினுக்கு அறிவுரை கொடுங்க   திருமாவை அலறவிட்ட நிர்மலா
Advertisement

Nirmala - Thiruma: போதைப் பொருட்கள் நடமாட்டம் தமிழகத்தில் தான் அதிகம் மக்களவைக்கு வந்து, மத்திய அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன், தமிழக முதல்வருக்கு வழங்குங்கள் என்று திருமாவளவனுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெத்தியடி பதிலளித்துள்ளார்.

Advertisement

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான திருமாவளவன் நேற்று பேசினார். மேலும், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 47ல் நாடு முழுதும் போதைப் பொருள், சாராயத்தை முழுமையாக ஒழிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்யும் மத்திய அரசு, மது ஒழிப்பை பற்றி கண்டு கொள்ளவில்லை. இந்திய அளவில் இளம் தலைமுறையினர் பாழாகி வருவதை எண்ணி வேதனை அடைகிறேன்.

மத்திய அரசுக்கு இந்த வேதனை இருக்கிறதா என்று தெரியவில்லை. போதைப் பொருள் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமின்றி, நாடு முழுதும் தாராளமாக கிடைக்கின்றன; கள்ளச் சாராயமும் காய்ச்சி விற்கப்படுகிறது. ஆகவே, இந்திய அளவில் பூரண மதுவிலக்கை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய அளவில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துவதை வரவேற்கிறேன். ஆனால், திருமாவளவன் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க., தான் தமிழகத்தை ஆள்கிறது. அங்கே தான், கள்ளச்சாராயம் அருந்தி 56 பேர் சமீபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மக்களவைக்கு வந்து, மத்திய அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன், தமிழக முதல்வருக்கு வழங்குங்கள். போதைப் பொருட்கள் நடமாட்டம் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது என்று பதிலளித்துள்ளார். இதனால் சிறிதுநேரம் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

Readmore: போட்டியின்போது திடீர் மாரடைப்பு!. மைதானத்திலேயே உயிரைவிட்ட 17 வயது பாட்மின்டன் வீரர்!

Tags :
Advertisement