”உடம்பு சரியில்லாதபோது கூட கட்டாயப்படுத்தி உடலுறவு”..!! இளம்பெண் பரபரப்பு புகார்..!! சென்னையில் பிரபல பாடகர் அதிரடி கைது..!!
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த குரு குகன் (26). தனியார் டிவி இசை நிகழ்ச்சியில் பாடகராக பங்கேற்று பிரபலமானவர். இவர், சென்னையில் வாரந்தோறும் நடக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், பாடகர் குருகுகன் மீது சாப்ட்வேர் இன்ஜினியரான இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ”குரு குகன் தனக்கு இசை நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமானதாகவும், சில நாட்களிலேயே தன்னை திருமணம் செய்து கொள்வதாக தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பெற்றோரிடம் வந்து பேசுமாறு நான் கூறினேன். இதையடுத்து, குருகுகன் தனது பெற்றோரை சந்தித்து, உங்களது மகள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்ற பாகுபாடெல்லாம் நான் பார்க்க மாட்டேன். அவரை திருமணம் செய்து வைக்குமாறு குருகுகன் கூறியுள்ளார். இதையடுத்து, இருவரும் காதலித்து வந்த நிலையில், திடீரென எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அப்போது, வீட்டில் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்.
இதனை சாதகமாக்கிக் கொண்டு தன்னை சந்திக்க வீட்டிற்கு வந்த குருகுகன், என்னை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டார். பின்னர், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என என்னை சமாதானப்படுத்தினார். இதையடுத்து, தனது பெற்றோரை சம்மதிக்க வைக்க தாமதமாகிறது என கூறிவந்த குருகுகன், தான் கருவுற்று இருந்ததை கூறியதால் தன்னை வெளியில் அழைத்துச் செல்வதாக கூறி கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் அந்த இளம்பெண் புகாரில் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், இளம்பெண் அளித்த புகார் தொடர்பாக பாடகர் குரு குகன் மீது பொய்யான உத்தரவாதம் கொடுத்து பாலியல் உறவு வைத்துக் கொள்வது, மிரட்டி அவமதித்து ஆதாரங்களை அழிப்பது மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பரங்கிமலை மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், குருகனை போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில், அவர் குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், பெருங்குடி பகுதியில் தலைமறைவாக இருந்த குருகுகனை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More : இந்த தவறை செய்தால் உங்களுக்கு காது கேட்காமல் போய்விடும்..!! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!!