குவாலியரில் பதக்கம் வென்று சென்னை திரும்பிய கூடைப்பந்து வீராங்கனை பலி..!! என்ன நடந்தது?
மத்திய பிரதேசம் குவாலியரில் கூடைப்பந்து போட்டி விளையாடுவிட்டு சென்னை திரும்பிய கோவை வீராங்கனை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தனியார் பள்ளியை சேர்ந்த மாணவி எலினா லாரெட் கூடைப்பந்து விளையாடுவதில் வல்லவர். 15 வயதான இவர் நிறைய போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கூடைப்பந்து போட்டி நடந்தது. அந்த போட்டியில் பங்கேற்றுவிட்டு ரயில் மூலம் கடந்த 15 ஆம் தேதி அந்த பெண் சென்னை திரும்பினார்.
ரயிலில் வந்த மாணவிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் உடல் நலம் மோசமானதால் பெரியமேடு அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஏற்றி சென்றனர். ஆனால் எலினா செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அவரது உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ரயிலில் சென்னை வரும் போது அவர் பர்கர், சிக்கன் ரைஸ், பீட்சா உள்ளிட்டவைகளை ஆன்லைனில் ஆர்டர் போட்டு அவரும் அவருடன் வந்தவர்களும் சாப்பிட்டதாக தெரிகிறது. இதை சாப்பிட்டதும் எலினாவுக்கு வயிற்று வலியும் வண்டியும் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் எலினா அவதியடைந்த நிலையில் கோவைக்கு செல்லாமல் சென்னையில் உள்ள உறவினர்களிடம் சொல்லி மருத்துவமனைக்கு சென்ற போது அவர் உயிரிழந்தார். எனவே அவரது உடல் உபாதைக்கு அவர் ஆர்டர் செய்த உணவுதான் காரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். எனினும் உறுதியான காரணங்கள் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரிய வரும்.
Read more ; சுயஇன்பம் முதல் இல்லற வாழ்க்கை வரை.. நடுங்க வைக்கும் எகிப்தியர்களின் வினோத பழக்கங்கள்..!!