அடுத்த 3 மணி நேரத்திற்கு..!! 6 மாவட்டங்களில் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் நவ.19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இன்று 9 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருந்த புயல் சின்னம் இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை ஒடிசா கடற்கரைக்கு நகரும் எனவும், இது புயலாக மாறுமா என்பது நாளை தெரியவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 36 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்திலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, தஞ்சை, நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.