இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறை…! தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதியும், 5ஆம் கட்ட தேர்தல் மே 20ஆம் தேதியும், 6ஆம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதியும் நடைபெற்றது. இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடந்தது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றதாய் அடுத்து வாகு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதன்படி, மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு இந்தியா தேர்தல் ஆணையம் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பதாக தேர்தல் ஆணையம் செய்தியாளரை சந்திப்பது என்பது இதுவே முதல் முறை. 2019 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொருகட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு துணை தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம்.
இன்று மதியம் செய்தியாளர் சந்திப்பின் போது தேர்தல் ஆணையம் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை அறிய அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் சட்டசபை இடைத்தேர்தல் ஜூன் 4ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தபால் வாக்குகள் மூலம் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம், ஏற்கனவே பல அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபிஏடிகள், தபால் ஓட்டுகள் ஆகியவற்றில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
வாக்கு எண்ணும் கூடத்தில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் யாரும் இருக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விதி 53(4)ன் கீழ், தேர்தல் நடத்தும் அலுவலரின் சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களுக்கு யாராவது கீழ்ப்படியத் தவறினால், வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே செல்லும்படி யாரையும் வழிநடத்த RO க்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.