வரலாற்றிலேயே முதல்முறை!. விளையாட்டு வீரர்களுக்கென தனி மாணவர் சேர்க்கை அறிமுகம்!. அசத்திய ஐஐடி மெட்ராஸ்!.
IIT Madras: வரலாற்றியே முதன்முறையாக விளையாட்டில் சாதனை புரிந்த வீரர்-வீராங்கனைகளை அங்கீகரிக்கும் வகையில் தனி மாணவர் சேர்க்கைப் பிரிவை (SEA) ஏற்படுத்தி அதற்கான சேர்க்கையை 2025 கல்வியாண்டில் இருந்து அறிமுகப்படுதியுள்ளது. அதாவது, சென்னை ஐஐடியில் முதல் முறையாக இளங்கலை படிப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கையில் 30 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்படி, சிறந்த விளையாட்டு வீரர்கள் சேர்க்கையை (Sports Excellence Admission – SEA) தற்போது 2025 கல்வியாண்டில் இருந்து அறிமுகப்படுதியுள்ளது.
அந்த வகையில், சென்னை ஐஐடியில் விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை (SEA) பிரிவின்கீழ், தேசிய அளவில் சாதனைப் படைத்த 5 தடகள வீரர் - வீராங்கனைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான JEE (ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கையை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.
இதில், இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு இளங்கலைப் பட்டப்படிப்பு பாடத் திட்டத்திலும் தலா இரண்டு இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிலும், ஒரு இடம் மாணவிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படுகிறது. நாட்டிலேயே முதன்முறையாக விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கையை தனது இளங்கலைப் படிப்புகளில் சென்னை ஐஐடி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை அங்கீகரிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். தகுதியான மாணவர்கள் விளையாட்டுகளில் தொடர்ந்து சிறந்து விளங்கவும், தொடர்ந்து உயர்கல்வியைத் தொடரவும் இத்திட்டம் ஊக்குவிக்கிறது. தற்போது, இத்திட்டத்தின் கீழ், தேசிய அளவில் சாதனை படைத்து 5 விளையாட்டு வீரர்கள் சென்னை ஐஐடியில் சேர்ந்துள்ளனர்.
Readmore: “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”!. இன்று தேசிய பெண் குழந்தை தினம்!.