வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்த பெண்; மகளை கடத்திச் சென்று இளைஞர் செய்த கொடூரம்..
50 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத பழங்குடியின பெண்ணின் 17 வயது மகளை கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த இளைஞரின் தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், பழங்குடியின பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் மருத்துவ செலவுக்காக, விஷால் தவாலி என்ற நபர் ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக அவரால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் கடும் அவதியடைந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடன் அளித்த விஷால் மற்றும் அவரது தாய் ரேணுகா, கடன் வாங்கிய பெண்ணிடம் பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆனால் அந்தப் பெண்ணால் வாங்கிய கடனை திரும்பி கொடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விஷால் மற்றும் அவரது தாய் ரேணுகா, அந்தப் பெண்ணை பழிவாங்க முடிவு செய்துள்ளனர்.
அதன் படி, அவர்கள் பணத்தை வாங்கி திரும்ப செலுத்த முடியாத பெண்ணின் 17 வயது மகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடத்தியுள்ளனர். இதையடுத்து, அந்த சிறுமியை விஷால் சிறுமியை கட்டாய திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து, அவருக்கு பாலியல் ரீதியாகவும் தொல்லை அளித்துள்ளார். மேலும் விருப்பம் இல்லாமல் சிறுமியை விஷால் திருமணம் செய்து பாலியல் ரீதியாகவும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விஷால் மற்றும் அவரது தாய் ரேணுகாவை கைது செய்துள்ளனர்.