For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 3 முறை பொய் சொல்கிறார்கள்..! பெண்களை பற்றிய அரிய தகவல்கள் இதோ!

04:10 AM Feb 06, 2023 IST | Kokila
பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 3 முறை பொய் சொல்கிறார்கள்    பெண்களை பற்றிய அரிய தகவல்கள் இதோ
Advertisement

ஒரு வெற்றிகரமான சமூகம் உருவாகுவதற்கு பெண்களே மிகமுக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அந்தவகையில், பெண்களை பற்றி சில அரிய தகவல்களை பார்க்கலாம்.

Advertisement

பெண்கள் உடல் ரீதியாக மிகவும் பலவீனமானவர்கள் என்பது பொதுவான கருத்து உள்ளது. தாய்மையில் இருந்து தான் இந்த உலகின் உயிர்கள் அனைத்தும் தோன்றுகின்றன. “பெண்ணில்லா ஊரில் பிறந்தவர்கள்” அன்பின் இலக்கணம் அறியாதவர்களாக” தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றார்போல்,
பெண்களே நாட்டின் கண்கள் என்றழைப்படுகிறார்கள். அந்தவகையில் தற்போது, பெண்கள் இல்லா துறைகளே கிடையாது, அனைத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். பெண்களை பற்றி சில அரிய தகவல்களை பார்க்கலாம்.

உலகத்தில் டாப் 20 பணக்காரப் பெண்களில் 90 சதவீதப் பெண்கள் குடும்பங்களை சார்ந்து இல்லாமல், தனது முயற்சினால், இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.
சராசரியாக ஒருநாளைக்கு ஆண்கள் 7000 வார்த்தைகள் பேசுகிறார்கள். பெண்கள் 20,000 வார்த்தைகள் பேசுகிறார்கள் என்றும் உலகத்தில் ஒவ்வொரு 90 விநாடிகளிலும் பிரசவத்தின்போது ஒரு பெண் தன் உயிரை இழக்கிறாள் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 1600 பெண்கள் பிரசவத்தில் இறக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பெண்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுதால்தான், ரஷ்யாவில் ஆண்களைவிட 90 லட்சம் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள். சராசரியாக ஒருவருடத்திற்கு பெண்கள் 30-ல் இருந்து 64 முறை அழுவார்கள் எனவும் பல துறைகளில் முன்னேறினாலும் பொய் சொல்லும் விஷியத்தில், ஒருநாளைக்கு சராசரியாக 3 முறை பெண்கள் பொய் சொல்கிறார்கள், ஆனால் ஆண்கள் பெண்களைவிட 6 மடங்கு அதிகமாக பொய் சொல்கிறார்கள் என ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குமட்டல், செரிமானம் ஆகாமல் இருப்பது, தோள்பட்டை வலிகள் இருந்தால் பெண்களுக்கு நெஞ்சுவலி வருவதற்கான அறிகுறிகளாக சொல்லப்படுகிறது. பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தைவிட, வேகமாவே துடிக்கும் என்றும் ஆண்களைவிட பெண்களே இதயநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தங்கள் வாழ்நாளில் 4 வருடங்களை மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யவே செலவிடுகிறார்களாம். ஆண்களைவிட பெண்களுக்கு சுவை நரம்புகள் அதிகம் இருக்கிறது. 2வது உலகப்போரில் சோவியத் யூனியனில் 8 லட்சம் பெண்கள் ராணுவத்தில் இணைந்து பல முக்கிய திட்டங்களை கொண்டுவந்துள்ளனர். ஆண்களைவிட பெண்கள் மல்டிடாஸ்கிங் செய்வதில் சிறந்தவர்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாளில் தனக்கான உடையை தேர்ந்தெடுப்பதில் மட்டுமே ஒருவருட காலத்தை பெண்கள் செலவழிக்கிறார்கள். பெண்கள், தங்கள் இருகாதுகளாலும் ஒரே நேரத்தில் வெவ்வேறு விஷியங்களை கேட்கும் திறன் கொண்டவர்கள்; பிறர் பேசும் பொய்யை எளிதாக கண்டுபிடிக்கும் திறன் பெண்களுக்கு உண்டு. வண்ணங்களை பிரித்துபார்க்கும் திறன் ஆண்களைவிட 20% அதிகமாக பெண்களுக்கு உண்டு.

Tags :
Advertisement