உங்க வீட்டில் நாய், பூனை இருக்கா?? அப்போ மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுத்து விடாதீர்கள்..
வீட்டில் இருக்கும் மனிதர்களை போலவே வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளையும் சமமாக நடத்தும் மனிதர்கள் பலர். இன்னும் சொல்லப்போனால் மனிதர்களை விட தங்களின் செல்லப்பிராணிகளை நன்கு கவனித்துக் கொள்வார்கள். ஆனால் சிலருக்கு, தங்களின் செல்லப்பிராணிகளுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும், என்ன உணவு கொடுக்க கூடாது என்று தெரிவதில்லை. இதனால் மனிதர்களாகிய நாம் உண்ணும் சில உணவுகள், செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனைகளுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவையாக மாறிவிடும். ஏனென்றால், மனிதர்களை போல் அல்லாமல் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு வேறுபட்ட வளர்சிதை மாற்றம் உள்ளது. இதனால், நாய் மற்றும் பூனைகளுக்கு என்ன உணவுகளை கொடுக்க கூடாது என்று தெரிந்து கொண்டு அதன் படி உணவுகள் கொடுப்பது நல்லது. இல்லையென்றால், ஒரு சில உணவுகள் அவற்றுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
அந்த வகையில், உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத உணவுகள்: நாய்கள் மற்றும் பூனைகளின் ரத்த சிவப்பணுக்களை சேதப்படுத்தும் கலவைகள் வெங்காயம் மற்றும் பூண்டில் உள்ளது. இதனால், இந்த பொருள்கள் உள்ள உணவுகளை உங்கள் நாய் மற்றும் பூனைகளுக்கு கொடுக்கும் போது, அவர்களுக்கு கட்டாயம் ரத்த சோகை ஏற்படும். பொதுவாக திராட்சை மற்றும் உலர் திராட்சை மனிதர்களுக்கு மிகவும் நல்லது. ஆனால், இவை இரண்டையும் நாய்கள் மற்றும் பூனைகள், சிறிய அளவில் சாப்பிட்டாலும் கூட சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. தியோப்ரோமைன் (theobromine) மற்றும் காஃபின் சாக்லேட்களில் உள்ளது. இதனால், நாய்கள் மற்றும் பூனைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வழக்கத்திற்கு மாறாக இதயத் துடிப்பு அதிகரிக்கும். காபி, டீ மற்றும் எனர்ஜி டிரிங்ஸ்களில் உள்ள காஃபினைனும் பூனைகள் மற்றும் நாய்களின் இதயத் துடிப்பு அதிகரித்து விடும்.
Read more: “நீங்களும் என் காதலி கூட உல்லாசமா இருங்கடா”; இன்ஸ்டாகிராம் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த சோகம்..