தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க இதை ட்ரை பண்ணி பாருங்க.!?
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குழந்தை பிறந்தவுடன் ஒரு சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு மிகவும் குறைவாக இருக்கும். இத்தகைய தாய்மார்கள் ஒரு சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.
மேலும் பல்வேறு காரணங்களுக்காக தாய்ப்பால் சுரப்பு குறைகிறது. தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், பாலிசிஸ்டிக், ஓவரியன் சின்ட்ரம், ஒரு சில நோய்களுக்கு தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்வது போன்ற பிரதான காரணங்களாலும் தாய்ப்பால் குறைவாக குறைக்கிறது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்?
1. சீரகம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமானத்தை சீர் செய்யும் சீரகத்தை வறுத்து பொடி செய்து கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
2. கொழுப்பு நிறைந்த மீன்கள் மற்றும் இறைச்சிகளை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இறைச்சிகளில் உள்ள கொழுப்புகள் நம் உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக வளரும்.
3. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
4. தண்ணீர் காய்கறிகளான சௌசௌ, பீர்க்கங்காய், சுரக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5. அடிக்கடி உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
மேலும் கீரை வகைகள், பெருஞ்சீரகம், வெந்தயம், உலர் மீன்கள், ஓட்ஸ், எள், பப்பாளி காய் மற்றும் பழம் போன்றவற்றையும் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.