முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் உணவுகளும்… வழிமுறைகளும்…!!

05:15 AM May 12, 2024 IST | Baskar
Advertisement

வயதானவர்களுக்கே மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி, 40 வயதுக்கு கீழான பலருக்கும் மாரடைப்பு சமீப காலங்களில் ஏற்படுகிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி உள்ளன.

Advertisement

உடல் முழுவதற்கும் ரத்தத்தை அளிக்கும் உறுப்பாக இதயம் இருப்பதால் உயிர் இயங்குவதற்கு அவசியமானது.மாரடைப்பு என்பது இதய தசைகள் இறந்து சிதைவுறுவது. நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது, அதிக வியர்வை, மூச்சுத் திணறல் எனத் தொடங்கி இடது தோள்பட்டை, கைகள், தாடைகளில் வலி பரவுதல் வரை இதய நோய்க்கான அறிகுறிகளாகும். ஆண்களுக்கு மட்டுமின்றி தற்போது பெண்களுக்கும் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அளவு அதிகரிப்பு இவற்றுக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன.

தற்போதைய சூழ்நிலையில், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்:

1)மது அருந்துதல், புகை பிடித்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் எடுத்துக்கொள்ளும் அளவை படிப்படியாக குறைக்க வேண்டும்.

2)கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை, எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும்.

3)உப்பு, இனிப்பு அதிகமுள்ள உணவுகளை சேர்க்கக்கூடாது.

4)உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும்.

5)மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக அதனை சரிசெய்ய முற்பட வேண்டும். முடிந்தவரை எப்போதும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

6)தினமும் 8 மணி நேரம் நல்ல தூக்கம் வேண்டும்.

7)நாள் ஒன்றுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது நுரையீரல் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். இது இதய நோய் ஏற்படுவதைக் குறைக்கும்.

8)குறைந்தது நாள் ஒன்றுக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலை இயக்கக்கூடிய ஏதேனும் ஒரு பயிற்சியில் ஈடுபடலாம்.

9)வேலை தவிர்த்து உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடலாம். இது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

10)தவிர, உணவுகளில் பழங்கள், காய்கறிகளை அதிகம் எடு
மாரடைப்பு வராமல் இருக்க கட்டாயம் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்..

மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் உணவுகள்:

1) ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது.

2) ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் கொலஸ்ட்ராலை எதிர்த்துப் போராடும் நார்ச்சத்து, பெக்டின் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இவை ஆரோக்கியமான இதயத்திற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது.

3) சால்மன் மீன்: சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 இதய ஆரோக்கியத்திற்கு அற்புதமாக செயல்படுகிறது. இது இதய கோளாறுகளின் அபாயத்தைத் குறைக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

4) கருப்பு பீன்ஸ்: கருப்பு நிற பீன்ஸ் ஃபோலேட், ஆக்ஸிஜனேற்ற மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் வளமான
மூலமாகும். இவை கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன.

5) செர்ரி பழங்கள்: செர்ரி பழங்கள் இதயத்திற்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. இவற்றில் இரத்த நாளங்களுக்கு நன்மை செய்யும் ஆந்தோசயனின் நிறைந்துள்ளது.

6) வால்நட்: வால்நட் பருப்பில் ஒமேகா-3 அமிலங்கள் உள்ளன. இந்த நிறைவுறதா கொழுப்புகள் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுவதோடு, இருதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Read More: Solar Storm | பூமியை தாக்கிய சூரிய புயல்.!! வானில் நிகழ்த்திய மாயாஜாலம்.!! முழு விபரங்கள்.!!

Advertisement
Next Article