சர்க்கரை நோயாளிகள் இப்படி தான் இட்லி சாப்பிட வேண்டும்.. டாக்டர் அட்வைஸ்!!
சர்க்கரை நோய் இன்றைய காலகட்டத்தில் சாதாரண நோயாக மாறிவிட்டது. பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு கூட சர்க்கரை நோய் உள்ளது. இதனால் பலர் அஜாக்கிரதையாக இருந்து விடுகின்றனர். இது முற்றிலும் தவறு. சர்க்கரை அளவை நாம் கட்டாயம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், அது பெரும் பிரச்சனையாகி விடும். அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பல வழிகள் உள்ளது. உதாரணமாக, உணவு முறை, உடற்பயிற்சி, சிகிச்சை, யோகா மற்றும் தியானம் ஆகும்.
சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியது 7 மணி நேர தூக்கம். குறைந்தது 7 மணி நேரம் தூக்கமாவது இருக்க வேண்டும். புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். அந்த வகையில், அரிசியில் செய்யப்படும் இட்லி தோசை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்குமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். நீங்கள் இட்லி சாப்பிடலாம். ஆனால் 2 இட்லிகள் தான் சாப்பிட வேண்டும். அதுவும் அந்த இட்லிகளை சாம்பாரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். சாம்பாரில் உள்ள பருப்பில் அதிக ப்ரோடீன் இருப்பதால் அது உடலுக்கு நல்லது. நீங்கள் இப்படி 2 இட்லியும் சாம்பாரையும் சாப்பிட்டால் உங்கள் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
மதிய உணவிற்கு, நீங்கள் கருப்பு கவுனி அரிசி சாதம் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், மீன், கோழி இறைச்சி, முட்டை சாப்பிடலாம். ஆனால் இதை பொரித்து சாப்பிட கூடாது. பீன்ஸ், கீரை போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். பழங்களை பொறுத்தவரை, கொய்யாப்பழம், தர்பூசணி, பப்பாளியை அரை கப் அளவிற்கு மட்டும் சாப்பிடலாம். இதனுடன் சேர்த்து சிறிது உடற்பயிற்சி செய்வது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்..