முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எச்சரிக்கை: இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது..!

Warning: These foods should not be reheated and consumed..!
12:22 PM May 26, 2024 IST | shyamala
Advertisement

உணவை சூடுப்படுத்தி சாப்பிடுவதால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து,  ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது.

Advertisement

உணவுகளை இப்படிச் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்துபோய்விடும். அதுவே உடல் ஆரோக்யத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும்’என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், `இது ஃபுட் பாய்ஸனிங் தொடங்கி இதய நோய், புற்றுநோய் போன்ற பெரிய நோய்களுக்கு வரை வழிவகுத்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்’ என்றும் எச்சரிக்கின்றனர்.

அந்த வகையில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

கீரை: கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ்  (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக   (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் தன்மையை கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும், அதனை சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

சிக்கன்: கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானமாக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறிவிடுகிறது. எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

காளான்: காளானில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, மற்றொரு முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும். காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தேவைக்கேற்ப உணவை சமைத்து சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Read More: காளான் வளர்ப்பில் தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் சாப்ட்வேர் பிரதர்ஸ்..!

Advertisement
Next Article