எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து தண்ணீருக்கான கட்டணமும் அதிரடியாக உயருகிறது..!! மக்கள் அதிர்ச்சி..!!
கர்நாடகத்தில் எரிபொருள் விலை உயர்வை அடுத்து, தண்ணீர் கட்டணத்தை உயர்த்த காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருகிறது.
துணை முதல்வர் டி.கே, சிவக்குமார் இதுகுறித்து கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீருக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் தங்களுக்கு வேறு வழி இல்லையெனவும் தெரிவித்துள்ளார். நாங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகிறோம். புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பெங்களூரு குடிநீர் பகிர்மானம் மற்றும் கழிவு அகற்ற வாரியத்துக்கு எந்த வங்கியும் பொருளாதார ஆதரவு அளிக்க முன்வரவில்லை.
10 முதல் 15 நாட்களில் காவேரி திட்டத்தின் 5-வது கட்டம் முடிவடைந்துவிடும். தண்ணீருக்கு செலவாவதில் 70% மின்சாரம் மற்றும் தொழிலாளர் கூலிக்கு செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. ஆகவே, வேறு வழியில்லை. வாரியத்தை நிலைநிறுத்த சாத்தியமானவற்றை முயற்சித்து வருகிறோம். உலக வங்கிகளும் பொருளாதார ஆணையங்களும் நாங்கள் இந்த சிக்கலை எதிர்கொள்வதில் அரசியல் செய்வதாக கூறுகின்றனர். ஆனால், இதனை தீர்க்க முயற்சிக்கவில்லை. பெங்களூருவில் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
Read More : முதல்வரின் மாஸ் உத்தரவு..!! இனி ஒரு நிமிடம் போதும்..!! பத்திரப்பதிவுத் துறையில் மிகப்பெரிய மாற்றம்..!!