For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விஷச்சாராய உயிரிழப்பு எதிரொலி : மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

Following the Kallakurichi poisoning incident, drug shops have been restricted from selling raw materials including alcohol and ethanol.
02:56 PM Jun 21, 2024 IST | Mari Thangam
விஷச்சாராய உயிரிழப்பு எதிரொலி   மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து,  ஆல்கஹால்,  எத்தனால் உள்ளிட்ட மூலப் பொருட்களை விற்பனை செய்ய மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு 19ஆம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40ஆக இருந்தது. தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 49 ஆக உள்ளது.

இதன் எதிரொலியாக  ஆல்கஹால்,  எத்தனால் உள்ளிட்ட மூலப் பொருட்களை விற்பனை செய்ய மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 37,000 மருந்துக்கடைகளிலும் ஸ்பிரிட்,  சானிடைசர்,  ஹாண்ட் வாஷ் உள்ளிட்டவை மற்றும் ஆல்கஹால், எத்தனால் உள்ளிட்ட மூலப் பொருளாக இருக்கும் மருந்து பொருட்கள், சுத்தம் செய்யும் கிருமிநாசினிகளை விதிமுறைகளின்படி விற்பனை செய்ய தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அளவுக்கு அதிகமாக சானிடைசர் வாங்குபவர்களின் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் மருந்து கடைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Read more ; ‘கடந்தாண்டு விஷச்சாராய மரணங்கள்’ அரசு எடுத்த நடவடிக்கை இதுதான்!! – முதலமைச்சர் விளக்கம்

Tags :
Advertisement