For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விமானத்திற்குள் இத்தனை அருவருப்புகளா? விமானப் பணிப்பெண்கள் சந்திக்கும் மோசமான அனுபவங்கள்..

Flying in an airplane may seem very luxurious and interesting on the surface. But the truth behind it will be completely different. A flight attendant shared her experiences
09:56 AM Oct 17, 2024 IST | Mari Thangam
விமானத்திற்குள் இத்தனை அருவருப்புகளா  விமானப் பணிப்பெண்கள் சந்திக்கும் மோசமான அனுபவங்கள்
Advertisement

விமானத்தில் பயணம் செய்வது என்பது அனைவரது வாழ்விலும் ஒரு ஆசையாக இருக்கும். பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள் அடிக்கடி இந்த சொகுசு பயணத்தை அனுபவிப்பர். ஆனால் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இது வெறும் கனவாக இருக்கும். விமானத்தில் பறப்பது என்பது வெளித்தோற்றத்திற்கு மிகவும் ஆடம்பரமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் தோன்றலாம். ஆனால் அதன் பின்னால் உள்ள உண்மை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். லண்டனைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவர் சமீபத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்,

Advertisement

அவர் கூறுகையில்,  பயணிகள் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். சிலர் கழிவறைகளில் புகைபிடிப்பார்கள், கேபின் குழுவினரை மோசமாக நடத்துவார்கள், சத்தமாக கத்துவார்கள், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள், மேலும் விமானப் பணிப்பெண்களுடன் தவறாக நடந்து கொள்ளவும் முயல்வார்கள். இந்த அனுபவங்களை நினைவுகூருவது அவரை இப்போதும் கலங்க வைக்கிறது.

அனைவரும் உணவு உண்ணும் போது ஒரு பெண் தனது குழந்தையின் டயபரை மாற்ற தொடங்கினார். நான் அவர்களை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறினேன். நான் அவ்வளவு சொல்லியும் அந்த பெண் டயப்பரை மாற்றிவிட்டு தன் வேலை முடிந்ததாக கூறினார். மேலும் டயப்பரை தனது இருக்கைக்கு அடியிலேயே வைத்துவிட்டு சென்றார்.

சில நேரங்களில் பெற்றோர்கள் சீட் பாக்கெட்டுகளில் குழந்தைகள் மலம் கழித்த டயப்பர்களை செருகிவிடுகிறார்கள். தங்களுடன் சக பயணிகள் பயணிக்கிறார்கள், தாங்கள் செய்த தவறுகளால் தூய்மை பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள், சுகாதார சீர்கேடு என்பதை கருத்தில் கொண்டு இந்த விஷயங்களை எல்லாம் பொதுமக்கள் கைவிட வேண்டும். இவ்வாறு அந்த விமான பணிப்பெண் தெரிவித்துள்ளார்.

Read more ; மரணத்திற்கு பிறகு உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையே நடக்கும் போராட்டம்.. கருட புராணம் சொல்வது என்ன?

Tags :
Advertisement