சாட்டை அடி போராட்டம்.. 48 நாள் விரதம்.. செருப்பு போட மாட்டேன்..!! இனி வேற மாதிரி தான் டீலிங் இருக்கும்..! - அண்ணாமலை பேச்சால் பரபரப்பு
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் டிசம்பர் 23ம் தேதி, தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் ஆண் நண்பரை விரட்டி விட்டு, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனில் எடுத்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் (டிச.24) பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஞானசேகரன் (37) என்ற நபரை நேற்று (டிச.25) அதிரடியாக கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு ஞானசேகரன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் விஸ்பரூம் எடுத்ததை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சிக்கு எதிராக சூளுரை விடுத்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "அண்ணா பல்கலை. மாணவி வன் கொடுமை செய்யப்பட்ட விவகாரத்திற்கு திமுக அமைச்சர்கள் வெட்கப்பட வேண்டும். மரியாதை கொடுத்து பேசி வருகிறேன். வீதிக்கு வந்து பேசினால் வேறு மாதிரி பேசுவேன். அந்த எப்.ஐ.ஆரை படித்தால் ரத்தம் கொதிக்கிறது. வடக்கு தெற்கு என எத்தனைநாட்களுக்கி இந்த எலவை பேசுவோம். இந்த அரசியல் இனி ஆகாது.
எத்தனை ஆர்ப்பாட்டம் செய்வது. அதனால் கட்சியின் தொண்டராக மாநில தலைவராக ஒரு சங்கல்பம் எடுத்திருக்கிறேன். இனிமேல் வேறுமாதிரி தான் உங்களை டீல் பண்ண போகிறோம். ஒவ்வொரு வீட்டிலும் முன்பு இனி ஆர்ப்பாட்டம் நடக்கும் நாளை காலை 10 மணிக்கு. நாளை எனக்கு நானே சாட்டையால் அடித்து கொடுக்கக்கூடிய நிகழ்வை எனது வீட்டின் முன்பு நடத்தப் போகிறேன். வீட்டின் முன்பு ஆறு முறை என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன்.
திமுக ஆட்சியை அகற்றப்படும் வரை செருப்பு போட மாட்டேன். 48 நாட்களுக்கு விரதம் இருக்க போகிறேன். பாஜக தொண்டர்களை இதை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். தமிழகத்தில் தீயசக்தி அழிக்கப்பட வேண்டும். பாதிக்ககப்பட்ட மகளிரோடு நாம் நிற்க வேண்டும்.. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு எங்களுக்கு வழி இல்லை. மிடில் கிளாஸ் பையன் ரத்தம் கொதிக்கிறது. நடுத்தர வாழ்வு வாழக்கூடிய நீங்கள் வெளியில் வந்து நில்லுங்கள் என கூறியுள்ளார்.