அண்ணா பல்கலை., வளாகத்தில் CCTV ஒயர் வொர்க் ஆகலனு சொல்ல வெக்கமா இல்லையா..? - திமுக ஆட்சிக்கு எதிராக அண்ணாமலை சூளுரை
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் டிசம்பர் 23ம் தேதி, தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் ஆண் நண்பரை விரட்டி விட்டு, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனில் எடுத்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் (டிச.24) பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஞானசேகரன் (37) என்ற நபரை நேற்று (டிச.25) அதிரடியாக கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு ஞானசேகரன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் விஸ்பரூம் எடுத்ததை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சிக்கு எதிராக சூளுரை விடுத்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "சில நேரத்தில் நாம் ஏன் அரசியலில் இருக்கறோம் என்ற கேள்வி வரும். பல இடங்களில் நானே என்னை கேள்விகள் கேட்டு இருக்கிறேன். தமிழகத்தில் பட்ட பகலில் ராஜ் பவனிலில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டிடத்திற்கு பின்னால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு. அதுவும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில்.. எதற்கா பூமியில் பிறந்தோம் என்று யோசிக்க வைக்கும் அந்த அளவுக்கு கொடுமை நடந்து இருக்கிறது. இது வழக்கமான அரசியல் ஆகிவிட்டது.
எங்கள் அரசியல் பார்வையை தீர்மானிக்க வேண்டிய தருணமாக இதை பார்க்கிறோம். குற்றவாளி சைதாபேட்டை பகுதியில் திமுகவில் வட்ட பொறுப்பில் உள்ள ஒரு ஆள். திமுக கட்சி போர்வையில் குற்றம் செய்பவர்களுக்கு தேவைப்படுகிறது. திமுக என்ற போர்வை இருந்ததால் மட்டும் தான் இந்த குற்றவாளி அந்தப் பெண்களின் மீது கை வைத்துள்ளான். அதே குற்றத்தை இரண்டாவது முறை செய்துள்ளான்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி காமிரா வைக்க துப்பில்லை. ஒரு டிரில்லயன் டாலர் எக்கானமி என்ன வெங்காயத்துக்கு?.ஞானசேகரன் முன்பே பாலியல் குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறான். முதல் தகவல் அறிக்கையை படித்து பார்த்தால் அந்த பெண்ணுக்கு மட்டும்த்தான் நடந்ததா? என எனக்கு சந்தேகமாக இருக்கிறது என ஆவேசமாக பேசியுள்ளார்.