For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இரவு முழுவதும் மீன்கள் உல்லாசம்..!! குழந்தைகள் கூட தூங்க முடியல..!! ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்..!!

07:53 AM Feb 10, 2024 IST | 1newsnationuser6
இரவு முழுவதும் மீன்கள் உல்லாசம்     குழந்தைகள் கூட தூங்க முடியல     ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்
Advertisement

அமெரிக்காவின் புளோரிடாவின் தம்பா விரிகுடா பகுதியில் வசிப்போருக்கு வினோதமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு சில காலமாகவே இரவு நேரங்களில் ஏதோ ஒரு மர்மமான சத்தம் கேட்டு வந்துள்ளது. இதனால் குழந்தைகளால் தூங்கக் கூட முடியாத நிலை உருவானதாம். முதலில் இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது? எதனால் வருகிறது? என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. சிலர் அருகே உள்ள ராணுவ தளத்தில் சீக்ரெட் ஆயுதங்களைச் சோதனை செய்வதாகவும் அந்தச் சத்தம் தான் இது எனக் கூறியுள்ளனர். இன்னும் சிலர் இரவு நேரங்களில் விசிட் அடிக்கும் ஏலியன்களின் சத்தமே இது எனக் கூறியுள்ளனர்.

Advertisement

பல நாட்கள் இதேபோல தொடர்ந்து சத்தம் கேட்டு வந்துள்ளது. குறிப்பாகக் குளிர் காலங்களில் எல்லா நாட்களும் இரவு நேரத்தில் சத்தம் கேட்டதால், அது என்ன சத்தம் என்பதை அங்குள்ள மக்களால் கண்டறிய முடியவில்லை. இதனால், ஆய்வாளர்களை உள்ளூர் நிர்வாகம் அழைத்துள்ளது. இதையடுத்து, அவர்கள் ஆய்வு செய்து இந்தச் சத்தத்திற்கான காரணத்தை மக்களிடம் சொன்னது அனைவருமே அதிர்ந்து போனார்கள். ஏனென்றால், அந்த சத்தம் மீன்களில் இருந்து வந்ததாம்.

இரவு நேரங்களில் ஆக்டிவாக உள்ள மீன்கள் தான் இந்த குழப்பமான சத்தத்தை ஏற்படுத்துகிறது. இனச்சேர்க்கை நேரங்களில் மீன்கள் இதுபோன்ற சத்தத்தைக் கிளப்புவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதை உறுதி செய்ய அப்பகுதியில் மைக்குகளை ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். பிளாக் டிரம் என்ற வகை மீன்கள் பொதுவாகக் குளிர்காலத்தில் இனச்சேர்க்கையில் ஈடுபடும். அப்போது ஏற்படும் இந்த சத்தம் 165 டெசிபல் வரை இருக்குமாம். இதுவே அங்கு வினோதமான சத்தத்திற்கு காரணமாம்.

Tags :
Advertisement