For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"இனி 'X' சமூக வலைதளத்திலும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்க்கலாம்.." 'Elon Musk' அசத்தலான அறிவிப்பு.!!

06:11 PM May 10, 2024 IST | Mohisha
 இனி  x  சமூக வலைதளத்திலும் திரைப்படங்கள்  வெப் சீரிஸ் பார்க்கலாம்     elon musk  அசத்தலான அறிவிப்பு
Advertisement

Elon Musk கடந்த ஆண்டு X தளத்தின் மூலம் வருமானம் ஈட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது பயனர்கள் முழு வீடியோக்களையும் பதிவேற்ற அனுமதிக்கிறது. இப்போது வருமானம் ஈட்டுவதற்காக முழு திரைப்படங்களையும் எக்ஸ் தளத்தில் பதிவேற்றலாம் என மஸ்க் தெரிவித்துள்ளார்.

Advertisement

Elon Musk தனது சமூக ஊடகமான X தளத்தில் புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். முன்பு ட்விட்டர் இணையதளத்தை வாங்கிய இவர் அதன் பெயரை X என மாற்றினார். நீண்ட வடிவ கட்டுரைகள், முழு நீள வீடியோக்கள் மற்றும் வருமானம் ஈட்டும் திட்டங்கள் என பல புதிய அம்சங்களை கொண்டு வந்தார். தற்போது X தளத்தின் சந்தா பெற்ற பயனர்கள் திரைப்படங்கள் வெப் சீரிஸ் மற்றும் பிராட்காஸ்ட்களை தங்களது சமூக வலைதளத்தில் பதிவிடலாம் என மஸ்க் அறிவித்துள்ளார்.

தனது சகோதரியும் ஸ்ட்ரீமிங் சேவையான பேஷன் பிலிக்ஸ் இணையதளத்தின் துணை நிறுவனருமான டோஸ்கா மஸ்க்கிற்கு பதிலளிக்கும் போது எலோன் மஸ்க் X தளத்தில் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்கள் பதிவேற்றப்படுவது குறித்து தெரிவித்தார். இது தொடர்பாக கூடிய அவர் " "உங்கள் திரைப்படங்கள், டிவி தொடர்கள் அல்லது பாட்காஸ்ட்களை சமூக ஊடகமான X ப்ளாட்பார்மில் சப்ஸ்கிரைப் செய்து பதிவேற்றி வருமானம் ஈட்டுங்கள்" என தெரிவித்தார்.

AI ஆடியன்ஸ் வசதி X தளத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக எலோன் மஸ்க் தெரிவித்தார். உங்கள் விளம்பரங்களுக்கான பார்வையாளர்களை கவரும் வகையில் சுருக்கமாக மற்றும் பொருத்தமான விளம்பரங்களை எங்கள் AI அமைப்பு உருவாக்கும். மேலும் இது குறி வைக்கப்பட்ட X பயனர்களின் தொகுப்பை உருவாக்கும்" என்று அவர் விரிவாகக் கூறினார்.

மேலும் X தளத்தில் சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே ரிப்ளை செய்யக்கூடிய அம்சத்தை வழங்கக்கூடிய புதிய டூல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மஸ்க் தெரிவித்தார். இதன் காரணமாக ஸ்பேம் மற்றும் பாட்களை தடுக்கும் வகையில் இந்த புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த புதிய கருவி X தளத்தின் பதிவுகளின் தரத்தை மேம்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

Read More: ’நீங்கள் இருந்தால் எங்கள் இறையாண்மை பாதிக்கிறது’..!! இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றிய மாலத்தீவு அரசு..!!

Advertisement