வாரத்தில் 2 முறை இந்த மீன் சாப்பிட்டால் மாரடைப்பு வராது..!! ஆய்வு முடிவில் வெளிவந்த தகவல்..!!
அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு வகையான மீன்களிலும், ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன. அதேசமயம், அனைத்து மீன்களிலும், சில சத்துக்கள் ஒரே மாதிரியாக உள்ளன. மீன்களில் சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க செய்யாது. மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் இருக்கிறது.
மீன் சாப்பிடுவது இதய செயல்பாடுகளுக்கு சிறந்தது என்கிறார்கள். வாரம் இருமுறை மீன் சாப்பிடுவதால், ரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் சீராகிறதாம். கொலஸ்ட்ராலில் இருந்து தப்பித்தாலே, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகளும் குறைகிறது. ஏற்கனவே இதய நோய் அல்லது பக்கவாதம் உள்ளவர்களும் மீன்களை சாப்பிடுவதன் மூலம் இதய சிக்கல்களில் இருந்து தப்ப முடியும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கெல்லாம் காரணம் மீனில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் முக்கியமான மூலப்பொருள் தானாம். ஒவ்வொரு வாரமும் ஒமேகா -3 நிறைந்த மீன்களை 2 முறைக்கு மேல் சாப்பிட்ட உயர் ஆபத்துள்ள மக்களில், 6-ல் ஒரு பகுதியினருக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதும் வெகுவாக குறைந்துள்ளதாக, ஜமா இன்டர்னல் மெடிசின் என்ற இதழில் ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும் ஆய்வின் முன்னணி இணை ஆசிரியருமான ஆண்ட்ரூ மென்டே இதயத்துக்கு மீன் உணவினால் கிடைக்கும் நன்மைகளை பற்றி கூறியுள்ளார்.
அதில், "எளிதாக ஜீரணமாகக்கூடிய ஏராளமான சத்துக்கள் மீனில் உள்ளன. சிறந்த புரோட்டீன் உணவாகவும் மீன் திகழ்கிறது. நம்முடைய உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய B12 வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதயத்தை காக்கும் ஒமேகா 3 கொழுப்பு சத்தும் இந்த மீனில் உள்ளது. பயறுகளை சாப்பிட முடியாதவர்கள், அந்த சத்துக்கள் அனைத்தையும் இந்த மீனில் இருந்தே பெற்று கொள்ளலாம். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மீனை சாப்பிடுவது பாதுகாப்பு நன்மையை தருகிறது. ஒமேகா -3 நிறைந்த மீன்களை சாப்பிடுவதன் மூலம் இதய நோய்க்கு குறைந்த ஆபத்து உள்ளவர்கள் CVDயிலிருந்து ஓரளவு பாதுகாப்பை பெற முடியும். நினைவாற்றலை வளப்படுத்தும் சக்தி அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது" என்கிறார்.
அதாவது, தடிமனான மீன், கொழுப்பு சதை நிறைந்த மீன்களை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். மத்தி, சாளை, நெத்திலி போன்ற குட்டி குட்டி மீன்களை, எண்ணெயில் பொறிக்காமல் குழம்பு வைத்து சாப்பிடுவது மிக சிறந்தது. மத்தி மீனில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால், நரம்பு மண்டலத்தையும் சிறப்பாக செயல்பட தூண்டும். வஞ்சிர மீனில் ஒமேகா 3 என்ற சத்து இருப்பதால், இதயத்திற்கு பலம் சேர்க்கக்கூடிய கொழுப்புகளும் கிடைக்கின்றன. நெத்திலி, சங்கரா மீன், அயலை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களை, 100 கிராம் முதல் 200 கிராம் வரை வாரம் 2 முறையாவது சாப்பிடலாம்.
அதேபோல, மீன்களை சாப்பிட பிடிக்காதவர்கள் மீன் எண்ணெய் மாத்திரைகளை சாப்பிடலாம். தாவர எண்ணெய்யையும், மீன் எண்ணெய்யையும் ஒப்பிட்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டதாம். அதில், 4 வாரங்கள் மீன் எண்ணெய் சாப்பிட்டவர்களின் கொலஸ்ட்ரால் அளவு, அதே 4 வாரங்கள் தாவர எண்ணெய் எடுத்துக் கொண்டவர்களுடைய கொலஸ்ட்ரால் அளவை விட 5 மடங்கு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
Read More : பெண்களே சூப்பர் வாய்ப்பு..!! ரூ.1 லட்சம் மானியம்..!! நவ.23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க சமூக நலத்துறை அழைப்பு..!!