Budget 2024 | முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!!
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்றைய தினம் (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார்.
முத்ரா கடனின் தருண் வகையின் கீழ் கடன் பெற்று அதனை வெற்றிகரமாக திருப்பிச் செலுத்திய தொழில் முனைவோருக்கு ரூ.20 லட்சம் கடனுதவி வழங்கப்படும் என்று நிர்மலா சீராதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பு சிறு குறு தொழில் முனைவோர் மட்டுமின்றி புதிதாக தொழில் தொடங்க திட்டமிட்டிருப்போரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முத்ரா திட்டம்
பிரதமரின் முத்ரா யோஜனா திட்டமானது கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத வேளாண் தொழில் சேராத நிறுவனங்களுக்கு ரூ 10 லட்சம் வரை கடன் தொகை வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள் முத்ரா கடன்களை வழங்குகின்றன. இந்த திட்டத்தின் படி 3 பிரிவுகளாக கடனுதவி அளிக்கப்படுகிறது. சிஷு என்ற பெயரில் ரூ 50 ஆயிரம் வரையிலும் கிஷோர் என்ற பெயரில் ரூ 50 ஆயிரம் முதல் ரூ 5 லட்சம் வரையிலும் தருண் என்ற பெயரில் ரூ 5 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.
Read more ; மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலி..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?