For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: "அயோத்தி நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை.." நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு.!

03:45 PM Jan 21, 2024 IST | 1newsnationuser7
ராமர் கோவில் கும்பாபிஷேகம்   அயோத்தி நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை    நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
Advertisement

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க இருக்கின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வின் நேரடி ஒளிபரப்பிற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.

Advertisement

மேலும் தமிழகத்தில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட ராமர் கோவில்களில் கும்பாபிஷேக விழாவை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு பூஜைகள் பஜனைகள் மற்றும் அன்னதானம் போன்றவை ஏற்பாடு செய்யப்படவில்லை என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் இது தொடர்பாக தனது 'X' வலைதள பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு தமிழக அரசின் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அவர் " மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வின் நேரலை ஒளிபரப்பை தமிழகத்தில் தடை செய்து இருக்கிறது. மேலும் தமிழகத்தில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் போன்றவற்றிற்கும் அனுமதி இல்லை. மேலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோவில்களிலும் விழாக்களை ரத்து செய்யுமாறு காவல்துறையினர் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

Tags :
Advertisement