முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2024-25 மத்திய பட்ஜெட் தயாரிப்பு நிறைவு..! அல்வா தயாரித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...!

Final stage of preparations for Union Budget 2024-25 commences with customary Halwa Ceremony in New Delhi
05:35 AM Jul 17, 2024 IST | Vignesh
Advertisement

2024-25 மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான நடைமுறையின் நிறைவுக் கட்டத்தைக் குறிக்கும் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி, நேற்று டெல்லியில் மத்திய நிதி, அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Advertisement

பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் 'லாக்-இன்' செயல்முறை தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக அல்வா தயாரிக்கும் நிகழ்வு நடத்தப்படுகிறது. 2024-25-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், 2024, ஜூலை 23 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. வருடாந்தர நிதிநிலை அறிக்கை மானியங்களுக்கான தேவை, நிதி மசோதா போன்றவற்றை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டின் அனைத்து ஆவணங்களும் யூனியன் பட்ஜெட் செல்பேசி செயலியில் கிடைக்கும்.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் டிஜிட்டல் வசதியின் எளிய வடிவத்தைப் பயன்படுத்தி அணுகலாம். இந்த செயலி இருமொழிகளில் (ஆங்கிலம் & இந்தி) உள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளங்களில் இது கிடைக்கும். இந்த செயலியை www.indiabudget.gov.in என்ற யூனியன் பட்ஜெட் வெப் தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். 2024 ஜூலை 23 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட் உரை நிறைவடைந்த பின் பட்ஜெட் ஆவணங்கள் செல்பேசியில் கிடைக்கும்.

Tags :
2024 budgetBJPbudgetDelhimodinirmala sitaramanparliament
Advertisement
Next Article